இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு
India’s Nuclear Arsenal May Reach 190 Warheads: இந்தியாவிடம் தற்போது 190 அணு குண்டுகள் வரை இருக்கலாம் என ஆய்வு வெளியாகியுள்ளது.
190 அணு குண்டுகள்
அமெரிக்காவின் Federation of American Scientists (FAS) வெளியிட்ட புதிய ஆய்வின் படி, இந்தியா தற்போது 140 முதல் 225 அணு குண்டுகளுக்குத் தேவையான புளுடோனியம் உற்பத்தி செய்திருக்கலாம். அதில் 190 அணு குண்டுகள் வரை உருவாக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் அணு ஆயுத களஞ்சியம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதிய விமானங்கள், நில அடிப்படையிலான ஏவுகணைகள் மற்றும் கடல் அடிப்படையிலான ஏவுகணைகள் ஆகியவற்றை கொண்டு இந்தியா தனது பாதுகாப்பு திறனை விரிவாக்கி வருகிறது.

இந்த ஆய்வின் படி, இந்தியா தற்போது ஒன்பது வகையான அணு ஆயுத ஏவுகணை அமைப்புகளை இயக்குகிறது. இதில் இரண்டு விமானங்கள், ஆறு நில அடிப்படையிலான ஏவுகணைகள் மற்றும் ஒரு கடல் அடிப்படையிலான ஏவுகணை அடங்கும்.
மும்பை அருகே உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் Dhruva ரியாக்டர் மற்றும் 2010 வரை செயல்பட்ட CIRUS ரியாக்டர் ஆகியவை இந்தியாவின் புளுடோனியம் உற்பத்தியின் மூலமாக இருந்தன.
2026 ஏப்ரலில், கல்பாக்கத்தில் உள்ள 500-MWt Prototype Fast Breeder Reactor (PFBR) செயல்பாட்டைத் தொடங்கியது. இது ஆண்டுக்கு சுமார் 140 கிலோ புளுடோனியம்-239 உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை விட அதிகமாக
சமீபத்திய SIPRI அறிக்கையின் படி, இந்தியாவிடம் சுமார் 170 அணு குண்டுகள் உள்ளன. அதே அளவு பாகிஸ்தானிடமும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு, இந்தியாவின் அணு ஆயுத களஞ்சியம் விரைவில் பிரித்தானியாவை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும், சீனாவின் வளர்ச்சி இந்தியாவை அதிகப்படியான ஆயுத மேம்பாட்டுக்கு தூண்டுகிறது எனவும் குறிப்பிடுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |