வெறும் 1 ரூபாயை மாத சம்பளமாக எடுத்துக்கொண்ட இந்தியாவின் பணக்கார IAS அதிகாரி!
வெறும் 1 ரூபாயை மாத சம்பளமாக எடுத்துக்கொண்ட இந்தியாவின் பணக்கார IAS அதிகாரியைப் பற்றி தெரியுமா?
இந்தியாவில் பல ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகள் புகழ்பெற்றுள்ளனர். ஐஏஎஸ் டினா தாபி, ஐபிஎஸ் அமித் லோதா போன்றோர் இதற்கு உதாரணம்.
ஆனால், இந்தியாவின் மிகவும் பணக்கார ஐஏஎஸ் அதிகாரி யார்? என்றால், அந்த பட்டம் அமித் கட்டாரியாவிற்கு சொந்தமானது.
இவரின் தனித்துவம் என்னவெனில், இவர் முதலில் வெறும் 1 ரூபாயை மட்டுமே மாத சம்பளமாக எடுத்துக்கொண்டார்.
யார் இந்த அமித் கட்டாரியா?
அமித் கட்டாரியா, ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர். இவரின் குடும்பம் நோயல் எஸ்டேட் (real estate) தொழிலில் கோடிக்கணக்கான வருமானம் ஈட்டும் பாரிய தொழில் குடும்பமாக விளங்குகிறது.
டெல்லி-என்சிஆர் (Delhi-NCR) முழுவதும் இவர்களின் தொழில் பரவி உள்ளது.
இருந்தாலும், குடும்ப தொழிலில் சேர்ந்துவிடாமல், நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் அமித் கட்டாரியா ஐஏஎஸ் அதிகாரியானார்.
அவர் முதலில் வெறும் 1 ரூபாயை மட்டுமே மாத சம்பளமாக மட்டுமே பெற்றுக்கொண்டதாகவும், நாட்டிற்கு சேவை செய்யவே இந்த பணியை தெரிவு செய்ததாகவும் பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஐஏஎஸ் அமித் கட்டாரியாவின் சர்ச்சை நிகழ்வு
2015-ஆம் ஆண்டு, அமித் கட்டாரியா பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் போது கருப்பு கண்ணாடிகள் அணிந்திருந்தார். அவர் அப்போது பஸ்தர் (Bastar) மாவட்ட ஆட்சியராக இருந்தார்.
இதனால், அந்த நேரத்தில் சத்தீஸ்கர் மாநில முதல்வராக இருந்த ரமன் சிங் அவருக்கு நோட்டீஸ் (show-cause notice) அனுப்பினார். இந்த சம்பவம் அமித் கட்டாரியாவை மிகவும் பிரபலமாக மாற்றியது.
அமித் கட்டாரியாவின் கல்வி
அமித் கட்டாரியா, டெல்லி பப்ளிக் ஸ்கூல் (DPS), ஆர்.கே.புரம் பள்ளியில் படித்து, அதன் பிறகு IIT டெல்லியில் (IIT Delhi) மின்பொறியியல் (Electrical Engineering) படித்தார்.
பிறகு, UPSC சிவில் சர்வீஸ் தேர்வுக்கு (CSE) தயாராகி, 2003-ஆம் ஆண்டு இந்திய அளவில் 18-வது ரேங்கில் தேர்ச்சி பெற்று, சத்தீஸ்கர் (Chhattisgarh) மாநில கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
அமித் கட்டாரியாவின் மனைவி
அமித் கட்டாரியா, தொழில் ரீதியாக விமான நிலைய கமெர்ஷியல் பைலட் (Commercial Pilot) ஆன அஸ்மிதா ஹாண்டாவை (Asmita Handa) திருமணம் செய்துகொண்டார். அவர்கள் இருவரும் பயணம் செய்வதை விரும்புபவர்கள்.
அமித் கட்டாரியாவின் சொத்து மதிப்பு
ஊடக தகவல்களின் அடிப்படையில், ஐஏஎஸ் அமித் கட்டாரியாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.8.90 கோடி என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |