ரூ.1,700 கோடியை நன்கொடையாக அள்ளிக்கொடுத்த இந்தியர்: நாட்டின் இரண்டாவது தாராள குணம் கொண்ட நபர்
விப்ரோ குழுமத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து கடந்த 10 மாதங்களில் மட்டும் ரூ.1,774 கோடி அளவுக்கு நன்கொடை அளித்துள்ளனர்.
விப்ரோ குழுமத்தின் தலைவர்
இந்தியாவில் நன்கொடையாளர்கள் வரிசையில் ஷிவ் நாடாருக்கு அடுத்து இரண்டாவது இடத்தை எட்டியுள்ளார் அசிம் பிரேம்ஜி. HCL நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஆகியோரும் நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
முகேஷ் அம்பானி கடந்த 10 மாதங்களில் 376 கோடி நன்கொடையாக அளித்துள்ளார். மும்பை மாநகத்தை சேர்ந்த அசிம் பிரேம்ஜி விப்ரோ குழுமத்தின் தலைவராக செயல்பட்டுள்ளதுடன் தற்போது நிர்வாக உறுப்பினர்களில் ஒருவராக உள்ளார்.
1966 இல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் பட்டம் பெற்றார். 1966ல் அவரது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, குடும்பத்தின் சமையல் எண்ணெய் நிறுவனத்தை நிர்வகிக்க பிரேம்ஜி முடிவு செய்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறினார்.
சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடி
ஆனால் 1999ல் தொலைதூர கல்வி ஊடாக பொறியியல் பட்டத்தை முடித்துள்ளார். மென்பொருள் துறையில் களமிறங்கிய பின்னரே, அசிம் பிரேம்ஜியின் வளர்ச்சி உச்சம் கண்டுள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது ரூ.2 லட்சம் கோடி என்றே கூறப்படுகிறது. 2019ல் இருந்து விப்ரோ நிறுவனத்தின் செயல் தலைவராக பிரேம்ஜியின் மகன் ரிஷாத் பொறுப்பேற்றுள்ளார். அசிம் பிரேம்ஜியின் மொத்த சொத்து மதிப்பு என்பது 94,000 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |