முடிவுக்கு வந்தது இந்தியாவின் டி20 உலகக் கோப்பை கனவு! சோகத்தில் ரசிகர்கள்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 12 சுற்று போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதின் மூலம் இந்தியாவின் டி20 உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது.
இன்று அபுதாபியில் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 12 சுற்று போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது.
125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 18வது ஓவரின் முதல் பந்தில் வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் குரூப் 2 புள்ளிப்பட்டிலில் 8 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து நியூசிலாந்து அணி, டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றதின் மூலம் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவின் டி20 உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது.
New Zealand are into the semis ?#T20WorldCup | #NZvAFG | https://t.co/paShoZpj88 pic.twitter.com/PRo6Ulw4Dk
— T20 World Cup (@T20WorldCup) November 7, 2021
டி20 உலகக் கோப்யை அரையிறுதிக்கு குரூப் 1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளும், குரூப் 2வில் பாகிஸ்தான், நியூசிலாந்த அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
நாளை துபாயில் நடைபெறவிருக்கும் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா-நமீபியா அணிகள் மோதுகின்றன. கோலி இந்திய டி20 அணியின் கேப்டனாக களமிறங்கும் கடைசி டி20 போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.