இந்தியாவின் மூன்றாவது பெரும் கோடீஸ்வர பெண்மணி... ரூ 98,327 கோடி நிறுவனத்திற்கு உரிமையாளர் இவரது மகன்
இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்கள் பலர் வெற்றிகரமாக தங்கள் தொழில்களை முன்னெடுத்து செல்கின்றனர். அந்த வரிசையில் பல பெண் கோடீஸ்வரர்களும் தங்கள் குடும்ப வணிகத்தை கவனிக்கும் பொறுப்பை திறம்பட நிர்வகிக்கின்றனர்.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் வினோத் ராய் குப்தா
அப்படியான ஒரு பெண்மணி வினோத் ராய் குப்தா என்பவர். 2024 ஆம் ஆண்டுக்கான பெரும் கோடீஸ்வரர்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் வினோத் ராய் குப்தா சமீபத்தில் இணைந்துள்ளார்.
78 வயதாகும் வினோத் ராய் குப்தாவின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது ரூ 41,660 கோடி என்றே தெரிய வந்துள்ளது. வினோத் ராய் குப்தாவின் கணவர் 1958ல் நிறுவிய Havells இந்தியா நிறுவனத்தில் தமக்கிருக்கும் பங்குகளின் அடிப்படையிலேயே வினோத் ராய் குப்தா இந்தியாவின் மூன்றாவது பெரும் கோடீஸ்வர பெண்மணியாக உள்ளார்.
Havells நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 98,327 கோடி என்றே கூறப்படுகிறது. தற்போது Havells நிறுவனத்தை இவரது மகன் அனில் ராய் குப்தா நிர்வகித்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |