இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ள 10 மாநிலங்கள் - 5 ஆண்டுகளில் சாதனை
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் சென்றது, சில மாநிலங்களின் அசாதாரண வளர்ச்சியே ஆகும்.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட Gross State Domestic Product (GSDP) தரவுகளின்படி, FY20 முதல் FY25 வரை பல மாநிலங்கள் தேசிய வளர்ச்சியை விட அதிக அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன.
தேசிய நிலை
FY20-ல் இந்தியாவின் மொத்த GDP ரூ.145.35 லட்சம் கோடி இருந்தது. FY25-இல் ரூ.187.97 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம், 5 ஆண்டுகளில் 29 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மாநில வளர்ச்சி
1-அசாம்
45 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் மிக வேகமாக வளர்ந்த மாநிலமாக அசாம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அசாமின் GSDP ரூ.2.4 லட்சம் கோடியில் இருந்து ரூ.3.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
வளர்ச்சியின் காரணம்: வேளாண்மை, எண்ணெய் & எரிவாயு, வடகிழக்கு பகுதியில் அதிகரித்துள்ள அடிப்படை வசதி முதலீடுகள்.
2-தமிழ்நாடு
தமிழ்நாடு 39 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. தமிழ்நாட்டின் GSDP 12.4 லட்சம் கோடியில் இருந்து ரூ.17.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
வளர்ச்சியின் காரணம்: வலுவான தொழிற்துறை அடித்தளம் - கார் உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ், துணிநூல், சேவைத் துறை.
3-கர்நாடகா
கர்நாடக மாநிலம் 36 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன் GSDP ரூ.11.5 லட்சம் கோடியில் இருந்து ரூ.15.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
வளர்ச்சியின் காரணம்: தொழில்நுட்ப சேவைகள், ஸ்டார்ட்அப்கள், பயோடெக்னாலஜி, மேம்பட்ட உற்பத்தி துறைகள்.

இந்த மாநிலங்களின் வளர்ச்சி, இந்தியாவின் மொத்த பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பு செய்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில், மாநில அடிப்படையிலான முதலீடுகள் மற்றும் தொழில்துறை வளர்ச்சி இந்தியாவின் உலகளாவிய பொருளாதார நிலையை மேலும் வலுப்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Assam fastest growing state economy, Tamil Nadu 39 percent growth, Karnataka 36 percent growth, India GDP growth, RBI data, Top 10 fastest growing major state economies India 2025,, State-level GSDP performance India, Tamil Nadu industrial base contribution to India GDP growth, Karnataka tech services innovation driving state economy growth, India state economies outperform national GDP growth rate