இந்தியாவின் இளம் பணக்காரர் - Zepto நிறுவனர் கைவல்யா வோஹ்ரா
India’s youngest rich lister - Zepto Founder: இந்தியாவின் இளம் பணக்காரர் என்ற பெருமையை Zepto நிறுவனர் கைவல்யா வோஹ்ரா பெற்றுள்ளார்.
கைவல்யா வோஹ்ரா சொத்து மதிப்பு
இந்தியாவின் 2026-ஆம் ஆண்டுக்கான Hurun India Rich List வெளியிடப்பட்டுள்ளது. இதில், Zepto நிறுவனத்தின் இணை நிறுவனர் கைவல்யா வோஹ்ரா (Kaivalya Vohra) இந்தியாவின் இளம் பணக்காரராக பெயர் பெற்றுள்ளார்.
வோஹ்ரா வயது 23 மட்டுமே. அவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.2,600 கோடி என பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Zepto-வின் மற்றொரு இணை நிறுவனர் ஆதித் பாலிச்சா (Aadit Palicha), வயது 24, அவரின் சொத்து மதிப்பு ரூ.3,500 கோடி என பட்டியலில் உள்ளது. இருவரும் சிறுவயது நண்பர்கள்.
Zepto என்ற டெலிவரி ஸ்டார்ட்அப்
மும்பையில் வளர்ந்த வோஹ்ரா, பாலிச்சாவுடன் சேர்ந்து ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்துக் கொண்டிருந்தபோது, படிப்பை விட்டு விட்டு, தொழில் தொடங்க முடிவு செய்தனர். 2021-ஆம் ஆண்டு அவர்கள் Zepto என்ற குரோசரி டெலிவரி ஸ்டார்ட்அப்பை தொடங்கினர்.

பட்டியலில் இளம் தொழில் முனைவோர்கள்
இந்த பட்டியலில், Zepto நிறுவனர்களைத் தவிர, பல இளம் தொழில் முனைவோர்களும் இடம்பெற்றுள்ளனர்.
Wispr Flow என்ற AI ஸ்டார்ட்அப்பின் இணை நிறுவனர்கள் தனய் கோத்தாரி மற்றும் சஹஜ் கார்க், தலாரூ.4,200 கோடி சொத்துடன் 28 வயதில் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அதே வயதான சச்சிதானந்த் உபாத்யாய் (Lords Mark Industries) ரூ.2,900 கோடி சொத்துடன் இடம்பெற்றுள்ளார்.
பாரத்பே நிறுவனத்தின் ஷஷ்வத் நக்ராணி ரூ.1,500 கோடி சொத்துடன் பட்டியலில் உள்ளார்.
இந்த பட்டியல், இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழல் எவ்வளவு வேகமாக வளர்ந்து, இளம் தொழில் முனைவோர்களுக்கு பெரும் செல்வத்தை உருவாக்கி வருகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |