கனடா பள்ளி ஒன்றில் 215 சிறுவர் சிறுமியர் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாகாணம் ஒன்று முன்வைத்துள்ள கோரிக்கை
கனடாவில் பூர்வக்குடியினர் பள்ளி ஒன்று அமைந்துள்ள பகுதியில் 215 சிறுவர் சிறுமியர் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு மாகாணம் முழுவதும் தேடுதல் வேட்டை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Kamloops என்ற பகுதியில் அமைந்துள்ள உண்டுறை பள்ளி ஒன்றில் ராடார்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டதில், அங்கு 215 சிறுவர் சிறுமியர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து கனடாவே குலுங்கியது.
சட்டமன்றங்களில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. ஆங்காங்கு இறந்த குழந்தைகளின் நினைவாக குழந்தைகளின் காலணிகள் நூற்றுக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டன.
The flags at the Saskatchewan Legislature are being flown at half-mast to honour the 215 Indigenous children whose remains were found at the site of the former Kamloops residential school. pic.twitter.com/rI0yXzJXmw
— Scott Moe (@PremierScottMoe) May 30, 2021
அந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, பூர்வக்குடியினர் இறையாண்மை கூட்டமைப்பு (FSIN) என்னும் அமைப்பு, அரசு பல்வேறு மட்டங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.
குறிப்பாக, Saskatchewan மாகாணம் முழுவதும் அமைந்துள்ள பூர்வக்குடியினரின்
உண்டுறை பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில், ராடார் உதவியுடன் ஆய்வுகள் மேற்கொண்டு
மேலும் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிய முயற்சிகள்
மேற்கொள்ளுமாறு அந்த அமைப்பு அரசக்கு கோரிக்கை விடுத்துள்ளது.