இண்டிகோவின் ஏர்பஸ் ஒப்பந்தம் பிரித்தானியாவுக்கு கிடைத்த வெற்றி - ரிஷி சுனக்
இண்டிகோவின் 500 ஏர்பஸ் விமான ஒப்பந்தம்-பிரித்தானிய விண்வெளி துறைக்கு கிடைத்த வெற்றி என பிரதமர் ரிஷி சுனக் என பெருமையாக கூறியுள்ளார்.
பிரித்தானிய விண்வெளி துறைக்கு கிடைத்த வெற்றி - ரிஷி சுனக்
இந்திய விமான சேவை நிறுவனமான இண்டிகோ (Indigo) ஏர்பஸ் (Airbus) நிறுவனத்திடமிருந்து 500 விமானங்களை வாங்குவதற்கான பல பில்லியன் டொலர் ஒப்பந்தம் பிரித்தானிய விண்வெளித் துறைக்கு ஒரு பாரிய ஊக்கமளிப்பதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் பிரித்தானியாவில் பிரித்தானியாவுக்கு பல பில்லியன்கள் மதிப்புடையதாக இருக்கும் மற்றும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலைகளை ஆதரிக்கும், இது பிரித்தானியாவின் பொருளாதாரத்தை வளர்க்க உதவும் என்று பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார்.
Reuters/Indigo
மேலும், இண்டிகோ-ஏர்பஸ் நிறுவங்களுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம், பிரித்தானிய விண்வெளி துறைக்கு கிடைத்த வெற்றி என்றும் ரிஷி சுனக் கூறினார்.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ (Indigo), ஏர்பஸ் (Airbus) நிறுவனத்துடன் 500 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக திங்கட்கிழமை அறிவித்தது. இது விமான வரலாற்றில் புதிய சாதனையாக மாறியது.
Source: twimg
Indigo Airbus Deal, Rishi Sunak, United Kingdom, UK Aerospace, 500-aircraft deal
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |