பிரித்தானியா புறப்பட்ட விமானம்: மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியதன் பின்னணி
இந்தியாவிலிருந்து பிரித்தானியா புறப்பட்ட விமானம் ஒன்று, ஏழு மணி நேர பயணத்துக்குப் பின் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியுள்ளது.
மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிய விமானம்
நேற்று, இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியிலிருந்து பிரித்தானியாவின் மான்செஸ்டருக்கு புறப்பட்ட IndiGo நிறுவன விமானம் ஒன்று, ஏழு மணி நேர பயணத்துக்குப் பின் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியுள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர்ச்சூழலைத் தொடர்ந்து கடைசி நேர வான்வெளிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக IndiGo நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
IndiGo flight 6E33 (operated by Norse) made a U-turn on the border between Ethiopia and Eritrea and is returning to Delhi.
— Flightradar24 (@flightradar24) March 9, 2026
This was the first IndiGo Delhi - Manchester flight since the 26th of Feb. pic.twitter.com/McCeAUd2tS
மத்திய கிழக்கில் நிலவும் சூழல் காரணமாக எங்கள் விமானங்கள் சில நீண்ட பாதைகளை தேர்ந்தெடுக்கும் நிலை அல்லது மாற்றுப்பாதையில் பயணிக்கும் நிலை உருவாகியுள்ளது.
டெல்லியிலிருந்து மான்செஸ்டர் புறப்பட்ட எங்கள் நிறுவன விமானம் ஒன்று கடைசி நேர வான்வெளிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேரும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
அந்த விமானம், எத்தியோப்பியா மற்றும் எரித்ரியா நாடுகளின் எல்லைக்கருகே பயணித்துக்கொண்டிருக்கும்போது மீண்டும் டெல்லிக்கே திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |