கராச்சியில் தரையிறங்கிய விமானம்: நடுவானில் திடீரென உயிரிழந்த நபர்!
கத்தார் தலைநகர் தோஹாவுக்கு சென்று கொண்டிருந்த இண்டிகோ(indigo) விமானத்தில் பயணித்த பயணி திடீரென உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இண்டிகோ விமானம்
டெல்லி விமான நிலையத்திலிருந்து தோஹா சென்று கொண்டிருந்த விமானம் திடீரென பாகிஸ்தானிலுள்ள கராச்சிக்கு அவசர மருத்துவ தேவைக்காக கராச்சியில் தரையிறங்கியுள்ளது.
டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த பயணிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
@wiki
உடனே விமானப் பணிப்பெண்கள் விமானிக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப் படுவதாகவும் கூறியுள்ளனர்.
உயிரிழந்த நபர்
உடனே கராச்சி விமான நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டு விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. தரையிறங்கும் போது உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த நபர் திடீரென உயிரிழந்துள்ளார்.
@travell with hussian
இதனைக் கண்டு பயணிகள் அதிர்ச்சியடையவே விமானம் கராச்சியில் தரையிறக்கியுள்ளது.
”இறந்தவரது குடும்பத்திற்கு எங்களது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். இறந்தவரது உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறோம்” என இண்டிகோ நிர்வாகம் கூறியிருக்கிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.