அன்று ருத்ராட்ச மாலையை அணிந்த இந்திரா காந்தி.. இன்று ஏன் இவர்களுடன்? மோடி ஆவேசம்
சனாதன சர்ச்சை, ஒரே நாடு ஒரே தேர்தல் என பல்வேறு கேள்விகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார்.
இந்தியாவுக்கான மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
சனாதன சர்ச்சை
சனாதன தர்மம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "இந்த கேள்வியை நீங்கள் காங்கிரஸிடம் கேட்க வேண்டும். ஒரு காலத்தில் இந்த காங்கிரசில் மகாத்மா காந்தி தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது, இந்திரா காந்தி பகிரங்கமாக ருத்ராட்ச மாலைய தனது கழுத்தில் அணிந்திருந்தார்.
அவ்வாறு இருக்கையில் இன்று ஏன் சனாதனத்திற்கு எதிராக விஷத்தை கக்கும் நபர்களுடன் உள்ளார்கள் என்று கேள்வி கேட்க வேண்டும். வெறுப்பு எண்ணத்துடன் பிறந்தது திமுக" என்று கூறினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்
இந்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எங்களின் உறுதியான நிலைப்பாடு. அதற்காக பலரும் களத்தில் இறங்கியுள்ளனர்.
மேலும், இந்த குழுவிற்கு பலரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தினால் பல்வேறு பலன்கள் கிடைக்கும்” என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |