தனித்தமிழ் தகையும் - உரையாடலும்! அனைவரும் வாரீர்
எமது தாய்மொழி «தமிழ்» உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாக இன்னும் உயிருடன் இருந்துவரும் மொழி என்று பல புலவர்கள், மொழியியல் அறிஞர் பெருமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மறைமலையடிகள் 1916ஆம் ஆண்டு தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார். தமிழ்மொழி பிறமொழிச் சொற்களால் கெடாமல் தூய்மையுடன் வளரவேண்டும் என்ற நோக்கில் அவர் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்.
தொல்காப்பியரிலிருந்து சங்க இலக்கியம், சிற்றிலக்கியங்கள் வரை மொழிக்காப்பு உணர்வு இருந்து வந்தாலும், வடமொழி வல்லிடர் (ஆதிக்கம்) காரணமாக அது சிதைவுறும் நேரிடர் (அபாயம்) ஏற்பட்டது. அந்த நிலையில்தான் மறைமலையடிகள் முன்னின்று தமிழின் தனித்தன்மையைக் காக்க முனைந்தார்.
அவரின் இடைவிடாத முயற்சியால் தனித் தமிழ் இயக்கம் வலுவடைந்தது, தமிழை எழுத்திலும், பேச்சிலும் தூய்மையுடன் பயன்படுத்தும் நிலை உருவானது.
திருவள்ளுவர் ஆண்டை உருவாக்கியது, திருவள்ளுவர் திருநாள் கொண்டாட்டம், தமிழை செம்மொழியாக ஒப்புதல்பெறுவது (அங்கீகாரம்), இந்திமொழித் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் தலைமையேற்பது போன்ற பல வரலாற்றுச் செயலில் மறைமலையடிகள் முன்னிலை வகித்தார். 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் தமிழரின் தலைவராகவும், தமிழியக்கத்தின் நடுவமாகவும் மறைமலை அடிகளார் விளங்கினார்.
தமிழுக்காகவே பிறந்து, தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்தவரது வழித்தோன்றல் பேராசிரியர் திருநிறை. மறை. திருநாவுக்கரசு தாயுமானவர் அவர்கள் பேரண் வள்ளுவன் பள்ளி மற்றும் உலகத்தமிழ்மறை இயக்கத்தின் அழைப்பில் சுவிற்சர்லாந்திற்கு வருகை அளித்துள்ளார்.
இவருடன் நிகழ்காலப்பணிகள் தொடர்பிலும், தனித்தமிழ் இயக்கப்பணிகள் தொடர்பாகவும் உரையாடவும், நேர்காணவும் 25. 09. 2025 வியாழக்கிழமை மாலை 18.30 மணிமுதல் தமிழர் களறி மண்டபத்தில் மேற்காணும் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இன, மொழி உணர்வாளர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க அன்புடன் அழைக்கின்றோம்
பேர்ண் வள்ளுவன் பள்ளி
079 769 68 92
உலகத்தமிழ்மறை இயக்கம்
தமிழர் களறி