ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள்
பாகிஸ்தானுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு அறிவித்த ஒரு நாள் கழித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, ஆபரேஷன் சிந்தூர் மற்றும் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
ட்ரம்ப் தான் முதலில்
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தான் முதலில் போர் நிறுத்தத்தை அறிவித்தார் என்பதையும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முதன்முதலில் அறிவித்த இன்றைய போர்நிறுத்தம் குறித்து மக்களும் அவர்களது பிரதிநிதிகளும் விவாதிப்பது மிகவும் முக்கியம் என தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி,
இது எதிர்கால சவால்களை எதிர்கொள்ள நமது கூட்டு உறுதியை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகவும் இருக்கும். இந்த கோரிக்கையை நீங்கள் தீவிரமாகவும் விரைவாகவும் பரிசீலிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் என்றும் காந்தி பதிவு செய்துள்ளார்.
LoP Lok Sabha and LoP Rajya Sabha have just written to the PM requesting for a special session of Parliament to be convened immediately. Here are the letters pic.twitter.com/exL6H5aAQy
— Jairam Ramesh (@Jairam_Ramesh) May 11, 2025
முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகும், ஆபரேஷன் சிந்தூரின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்தும் அரசாங்கம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது.
முதன்மையான இந்த இரண்டு கூட்டங்களிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை. இந்த இரண்டு கூட்டங்களிலும், பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்க அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் எதிர்க்கட்சிகள் முழுமையான ஆதரவை உறுதியளித்தது.
1 மணி நேரத்திற்கு பின்னர்
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் ஒரு ஆச்சரியமான முன்னேற்றமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரு தரப்பினரும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அறிவித்தார்.
இதனையடுத்து அமெரிக்க வெளிவிவகரா செயலாளர் மார்கோ ரூபியோ போர் நிறுத்தத்தை அறிவித்தார். இந்த இரு அறிவிப்புகளுக்கும் பின்னர், சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி போர் நிறுத்தம் தொடர்பில் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவித்தார்.
இதன் அடிப்படையிலேயே, தற்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதுடன் நாடாளுமன்றத்தையும் அவசரமாகக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |