Grok AI செயலிக்கு இந்தோனேசியாவில் தற்காலிக தடை: X விளக்கம் அளிக்க உத்தரவு
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் Grok AI செயலிக்கு இந்தோனேசியா தற்காலிக தடை விதித்துள்ளது.
Grok AI செயலிக்கு தற்காலிக தடை
டிஜிட்டல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் X சமூக வலைதள பக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள Grok AI சாட்போட் சேவைக்கு இந்தோனேசியா தற்காலிக தடை விதித்துள்ளது.
சனிக்கிழமை அன்று இந்தோனேசியாவின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மியுட்டியா ஹபீத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், செயற்கை நுண்ணறிவு தீங்கான செயல்களுக்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த கவலை அதிகம் எழுந்து இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
போலியான தவறான படங்கள்
இந்த தடைக்கு AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் போலியான தவறான படங்கள் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை இத்தகைய டிஜிட்டல் கருவிகள் உளவியல் ரீதியாக பாதிப்படையாமல் இருப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அமைச்சர் ஹபீத் தெரிவித்துள்ளார்.

மேலும், X தளத்திடம் Grok AI மூலம் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறித்து இந்தோனேசிய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |