இந்தியாவின் ரூ. 3,884 கோடி ராணுவ ஒப்பந்தம்: இந்தோனேசியாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி
இந்தோனேசியாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா ஏற்றுமதி செய்யும் ஒப்புந்தம் குறித்த பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற உள்ளது.///
இந்தோனேசியாவுடன் ஒப்பந்தம்
இந்தியாவின் அதிநவீன சூப்பர்சோனிக் ஏவுகணை பிரம்மோஸ், உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய இந்த ஏவுகணை, தற்போது பல நாடுகளின் பாதுகாப்பு கவசமாக மாறிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் இந்தோனேசியா, இந்தியாவில் இருந்து ரூ. 3,884 கோடி மதிப்பிலான பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்ய உள்ளது.
இந்த ஒப்பந்தம், இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் ஏற்றுமதித் திறனை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
ஏற்கனவே சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகள், பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
சீனாவின் அச்சுறுத்தல்
இந்தோனேசியாவின் இந்த முடிவு, சீனாவின் அதிகரித்து வரும் இராணுவ ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு பதிலடியாக பார்க்கப்படுகிறது.
இந்தோனேசியா, தனது பாதுகாப்பு திறனை மேம்படுத்தி, பிராந்தியத்தில் நிலவும் சமநிலையை பேண விரும்புகிறது.
பிலிப்பைன்ஸ், தனது கடற்படையில் பிரம்மோஸ் ஏவுகணைகளை நிறுவியுள்ளது. இது, பிராந்தியத்தில் பிரம்மோஸ் ஏவுகணையின் தேவை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
இந்தியாவின் தொழில்நுட்பத் திறன்
இந்திய விமானப்படை, தனது சுகோய் விமானங்களில் பிரம்மோஸ் ஏவுகணைகளை பொருத்துவதற்கான முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. இது, இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய சாதனையாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |