குடும்பத்தோட அருமை தெரியணும்னா! சர்வைவர் ரியாலிட்டி ஷோவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திரஜா சங்கரின் உருக்கமான பதிவு
சர்வைவர் ரியாலிட்டி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட இந்திரஜா சங்கர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலகளவில் மெகா ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோவான ‘சர்வைவர்’ தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்குகிறார். முதல் எலிமினேஷனில் சிருஷ்டி வெளியேற, இந்த வாரம் எலிமினேஷனில் இந்திரஜா சங்கர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் அவர். அதில், நான் சர்வைவரில் இருந்தபோது கிடைத்த உங்கள் அன்பு மற்றும் ஆதரவிற்கு மிக்க நன்றி.
நீங்கள் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது. என்னை பற்றி நானே அறிந்துகொள்ளும் இப்படி ஒரு வாய்ப்பை எனக்கு கொடுத்த சேனல் மற்றும் சர்வைவர் டீமுக்கு நன்றி. அர்ஜுன் சாருக்கு நன்றி. அவர் என்னை சிறப்பாக வழிநடத்தினார்.
சக போட்டியாளர்களுக்கு என இதயபூர்வமான நன்றி. நீங்கள் எனக்கு ப்ளஸ் மைனஸ் என எல்லாவற்றையும் கற்றுத்தந்தீர்கள். என் பின்னால் எப்போதும் நிற்கும் குடும்பத்திற்கும் நன்றி. குடும்பத்தோட அருமை தெரியணும்னா சர்வைவர் ஷோ போயிட்டு வாங்க என தெரிவித்துள்ளார்.