சிந்து நதி நீர் நிறுத்தம்! பாகிஸ்தான் உலக வங்கியை நாடினால் இந்தியா என்ன செய்யும்?
பாகிஸ்தான் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக உலக வங்கியை நாடினால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது,
அமிஷ்சா தலைமையில் கூட்டம்
காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள், ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டில் மற்றும் ஜல் சக்தி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
#WATCH | India has suspended the Indus Waters Treaty with Pakistan following the Pahalgam terror attack
— ANI (@ANI) April 25, 2025
Visuals from the Baglihar Hydroelectric Power Project built on the Chenab River in Ramban, J&K pic.twitter.com/3qVBRiuzYz
இந்த உயர்மட்ட கூட்டத்தில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டில் பேட்டி
கூட்டத்தின் முடிவில் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டில், சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு முழுமையாக நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட சென்று சேராத வகையில் குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டங்களை உருவாக்க மத்திய அரசு உறுதியான முடிவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வங்கி தலையீடு
சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பான இந்த ஒப்பந்தம் உலக வங்கியின் முன்னிலையில் ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் உலக வங்கியின் உதவியை நாடினால், அதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள இந்திய அரசு முழுமையாக தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |