48 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் படைத்த அரிய சாதனை!
இந்திய கிரிக்கெட் அணி 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அறிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
தரம்சாலா மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து வீரர்களை 218 ஓட்டங்களுக்கு All-Out ஆக்கினர்.
முதல் இன்னிங்சில் அனைத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
குல்தீப் 5 விக்கெட்டும், அஷ்வின் 4 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
48 ஆண்டுகளுக்கு பிறகு...
மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் முதல் நாளிலேயே இங்கிலாந்து அணியை வீழ்த்தி 48 ஆண்டுகால சாதனை படைத்துள்ளனர்.
டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் முதல் இன்னிங்சில் எதிரணியின் பத்து விக்கெட்டுகளும் சுழற்பந்து வீச்சாளர்களிடம் சிக்கியது இந்தியாவுக்கு இது மூன்றாவது முறையாகும்.
1976-ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணி முதல் இன்னிங்சில் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது
1976-க்கு பிறகு (48 ஆண்டுகள் கழித்து) முதல் நாளில் சுழற்பந்து வீச்சாளர்கள் பத்து விக்கெட்டுகளை இன்று வீழ்த்தினர்.
அதற்கு முன்பு, முதல்முறையாக 1973-ம் ஆண்டு சென்னையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் இதே சாதனையை படைத்தனர்.
இன்றைய ஆட்டம்
இன்று (வியாழக்கிழமை) தொடங்கிய ஐந்தாவது டெஸ்டில் நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து, குல்தீப், அஷ்வின், ஜடேஜா ஆகியோரின் சுழல் மாயாஜாலத்தால் 218 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
குல்தீப் 5 விக்கெட்டும், அஷ்வின் 4 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (57) அரைசதம் அடிக்க, ரோகித் சர்மா (52 ஓட்டங்கள்), ஷுப்மான் கில் (26 ஓட்டங்கள்) கிரீஸில் இருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Kuldeep Yadav, Ravichandran Ashwin, Ravindra Jadeja, INDIA vs ENGLAND, Indians spinners rare record after 48 years, Dharamsala Test