இங்கிலாந்தை ஒட்டுமொத்தமாக சிதைத்த இந்திய அணி! 347 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 347 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நவி மும்பையில் நடந்தது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 428 ஓட்டங்களும், இங்கிலாந்து 136 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
அதனைத் தொடர்ந்து 479 ஓட்டங்கள் இமாலய இலக்கினை நோக்கி இங்கிலாந்து களமிறங்கியது. தீப்தி சர்மா, பூஜா வஸ்திரேக்கர் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 131 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து சுருண்டது.
தீப்தி சர்மா
இதனால் இந்திய அணி 347 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிரட்டலாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணியின் தரப்பில் தீப்தி சர்மா 4 விக்கெட்டுகளும், பூஜா 3 விக்கெட்டுகளும், ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த டெஸ்டில் 9 விக்கெட்கள் மற்றும் 87 ஓட்டங்கள் எடுத்த தீப்தி சர்மா சிறந்த வீராங்கனை விருதினை பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |