பவுண்டரிகளை விரட்டிய மந்தனா! இங்கிலாந்துக்கு தரமான பதிலடி
ஸ்மிரிதி மந்தனா பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை பெற்றார்
இந்திய வீராங்கனை ஸ்னேஹ் ராணா 24 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி டெர்பியின் கவுண்டி மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணியில் வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பிரையோனி ஸ்மித் 16 ஓட்டங்களும், எமி ஜோன்ஸ் 17 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். எனினும் பௌசியர் 26 பந்துகளில் 34 ஓட்டங்களும், ஃப்ரியா கெம்ப் அதிரடியாக 37 பந்துகளில் 51 ஓட்டங்களும் விளாசினர்.
Getty Images
இதன்மூலம் இங்கிலாந்து அணி 142 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஸ்னேஹ் ராணா 3 விக்கெட்டுகளையும், ரேணுகா சிங் மற்றும் தீப்தி சர்மா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ஷபாலி வெர்மா 20 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அதிரடியில் மிரட்டிய ஸ்மிரிதி மந்தனா 53 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 79 ஓட்டங்கள் விளாசி களத்தில் நின்றார். அவருக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் 22 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்தார்.
BCCI Women
இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணி பதிலடி கொடுக்கும் வகையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.