இந்திய அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றிய இலங்கை பந்துவீச்சாளர்
இந்திய அணியின் அதிரடி வீராங்கனைகள் ஷஃபாலி வெர்மா, ஹர்மன்பிரீத் ஆகியோரின் விக்கெட்டுகளை ஒஷதி வீழ்த்தினார்
இலங்கை அணி அடுத்தப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை நாளை சந்திக்க உள்ளது
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை வீராங்கனை ஒஷதி ரணசிங்கே 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மகளிர் ஆசியக் கோப்பை தொடர் வங்கதேச தொடங்கியுள்ளது. சில்ஹெட் மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடந்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிகஸ் 76 ஓட்டங்கள் விளாசினார்.
Dayalan Hemalatha 3⃣ / 1⃣5⃣
— Women’s CricZone (@WomensCricZone) October 1, 2022
Pooja Vastrakar 2⃣ / 1⃣2⃣
Deepti Sharma 2⃣ / 1⃣5⃣
Dominating performance from India in all departments to defeat Sri Lanka by huge margin. #WomensAsiaCup #AsiaCup #AsiaCup2022 pic.twitter.com/ToBpvrcEP3
இலங்கை அணியின் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஒஷதி ரணசிங்கே 3 விக்கெட்டுகளையும், சுகந்திகா குமாரி மற்றும் அதப்பத்து தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 18.2 ஓவர்களில் 109 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹசினி பெரேரா 30 ஓட்டங்களும், ஹர்ஷிதா மாதவி 26 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் ஹேமலதா 3 விக்கெட்டுகளையும், பூஜா மற்றும் தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ACC