37 ஓட்டங்களில் சுருண்ட அணி! ஆசியக் கோப்பையில் இமாலய வெற்றி
9 ஓட்டங்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஸ்னேக் ராணா சிறந்த வீராங்கனை விருதை பெற்றார்
இந்திய அணியின் தீப்தி சர்மா 4 ஓவர்களில் 10 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
ஆசியக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தாய்லாந்து அணியை வீழ்த்தியது.
சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - தாய்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.
முதலில் ஆடிய தாய்லாந்து அணி 15.1 ஓவர்களில் 37 ஓட்டங்களுக்கு சுருண்டது. நான்கு வீராங்கனைகள் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
மிரட்டலாக பந்து வீசிய இந்திய வீராங்கனைகளான ஸ்னேக் ராணா 3 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா மற்றும் ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
Twitter (@BCCIWomen)
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 40 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. சபினேனி மேகனா 20 ஓட்டங்களும், பூஜா வஸ்திரேக்கர் 12 ஓட்டங்களும் எடுத்து களத்தில் நின்றனர்.
Twitter (@BCCIWomen)
ஆசியக் கோப்பை தொடரில் வங்கதேசம் - ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நாளை நடக்க உள்ளன.