மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு 152 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த அவுஸ்திரேலியா
மகளிர் டி20 உலகக் கோப்பையின் டூ ஆர் டை போட்டியில், ஆஸ்திரேலியாவால் இந்தியாவுக்கு 152 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட தேர்வு செய்தது.
அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்கள் எடுத்தது. அவுஸ்திரேலியா தரப்பில் கிரேஸ் ஹாரிஸ் 40 ஓட்டங்களும், மெக்ராத் 32 ஓட்டங்களும், எலிஸ் பெர்ரி 32 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா, ரேணுகா சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, விளையாடிவரும், இந்திய அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா களத்தில் உள்ளனர். ஸ்மிருதி மந்தனா 6 ஓட்டங்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ஓட்டங்களும், ஷபாலி வர்மா 20 ஓட்டங்களும் எடுத்தனர். மேகன் ஸ்கட், சோஃபி மோலினெக்ஸ், ஆஷ்லி கார்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
IND Vs AUS | India Vs Australia Women T20 World Cup Live Score Update