மண்ணை கவ்விய இந்தியா மகளிர் அணி: 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து த்ரில் வெற்றி
இந்திய பெண்கள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.
முதல் பேட்டிங்கில் இந்தியா
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கும், இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான 2வது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
X/Sportstar
இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறிய நிலையில் 16.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 80 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரோட்ரிக்ஸ் 30 ஓட்டங்கள் குவித்தார்.
வெற்றி பெற்ற இங்கிலாந்து
இதையடுத்து எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனைகளான சோபியா டங்க்லி 9 ஓட்டங்களுடனும், டேனியல் வியாட் ஓட்டங்கள் எதுவும் குவிக்காமலும் வெளியேறினர்.
ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த ஆலிஸ் கேப்ஸி(25) நாட் ஸ்கிவர்-ப்ரண்ட்(16) நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இறுதியில் 11.2 ஓவர்கள் முடிவிலேயே இங்கிலாந்து பெண்கள் அணி 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 82 ஓட்டங்கள் குவித்தது.
X/Sportstar
மேலும் இந்திய பெண்கள் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |