உலகக்கோப்பை டி20: பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய இந்தியா
மகளிர் உலகக்கோப்பை டி20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
கேப்டன் மரூஃப் அதிரடி
கேப்டவுனில் நடந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, 4 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மரூஃப் 55 பந்துகளில் 68 ஓட்டங்களும், ஆயிஷா நசீம் 25 பந்துகளில் 43 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்திய அணியின் தரப்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா மற்றும் பூஜா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய இந்திய அணி 19 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.
Ayesha Naseem’s quickfire knock and a solid fifty from Bismah Maroof have given Pakistan a competitive total ?
— ICC (@ICC) February 12, 2023
Follow LIVE ?: https://t.co/wADFUnaV9L#INDvPAK | #T20WorldCup | #TurnItUp pic.twitter.com/SgZs1d4XKE
வெற்றியை உறுதி செய்த ஜெமிமா
ஜெமிமா ரோட்ரிகஸ் இறுதிவரை அட்டமிழக்காமல் 53 (38) ஓட்டங்கள் எடுத்தார். ஷஃபாலி வெர்மா 33 ஓட்டங்களும், ரிச்சா கோஷ் 31 ஓட்டங்களும் எடுத்தனர். பாகிஸ்தானின் நஷ்ரா சந்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
What a run chase! ?
— ICC (@ICC) February 12, 2023
The second-highest successful run-chase in Women's #T20WorldCup history ?#INDvPAK | #TurnItUp pic.twitter.com/eWJ6dBxCQ3
இன்று மாலை நடக்கும் போட்டியில் அயர்லாந்து - இங்கிலாந்து அணிகளும், இரவு நடக்கும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன.