அவுஸ்திரேலியாவில் ஓர் துயர செய்தி! மழைநீர் வடிகாலில் கண்ட பயங்கர காட்சி
அவுஸ்திரேலியாவில் ஆண் குழந்தையின் உடல் மழைநீர் வடிகாலில் இரண்டு வாரங்களாக கிடந்தது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆண் குழந்தை
பெர்த் புறநகர்ப் பகுதியான அலெக்ஸாண்டர் ஹைட்ஸில் உள்ள லா சால் சாலையில் உள்ள வடிகாலில், ஆண் குழந்தை ஒன்றின் சடலம் கிடப்பதை வணிகர்கள் சிலர் கண்டுள்ளனர்.
உடனே இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட, Homicide squad துப்பறியும் நிபுணர்கள் விசாரணை பொறுப்பேற்று ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஒரு தாளில் சுற்றப்பட்ட பிறந்த குழந்தையின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது தாயைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
15 நாட்களாக
குறித்த ஆண் குழந்தை சுமார் 15 நாட்களாக வடிகாலில் இருந்ததாக நம்பப்படுவதாக மேற்கு அவுஸ்திரேலிய ப்ரீமியர் ரோஜர் குக் தெரிவித்தார்.
குழந்தையின் உடல் மீட்கப்பட்ட மழைநீர் வடிகால் மீது அக்கம்பக்கத்தினர், தங்கள் துயரத்தை வெளிப்படுத்தும் விதமாக பூக்கள் மற்றும் பொம்மைகளை வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |