அவுஸ்திரேலியாவில் வீட்டின் மீது மோதிய கார்: பெண் குழந்தை பரிதாப பலி
Infant dies after car hit at home in australia: அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் கார் ஒன்று வீட்டின் மீது மோதியதில் குழந்தை உயிரிழந்தது.
அவுஸ்திரேலியாவில் விக்டோரியாவின் சென்ட்ரல் ஹைலேண்ட்ஸில், வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில் கார் மோதியதில் ஒரு வயது குழந்தை உயிரிழந்தது.
ஒரு வயது பெண் குழந்தை
அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தின் ஸ்மைத்ஸ்டேல் பகுதியில் உள்ள வீடொன்றின் வாகன நிறுத்துமிடத்தின் மீது கார் மோதியுள்ளது.

இதில் ஒரு வயது பெண் குழந்தை படுகாயமடைந்தது. திங்கட்கிழமை மதியம் சுமார் 1.20 மணியளவில் அவசர சேவைகள் வரவழைக்கப்பட, ஆபத்தான நிலையில் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இரவில் காயங்களால் உயிரிழந்தது. விக்டோரியா காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.