சுவிஸ் மாகாணமொன்றை கடுமையாக தாக்கியுள்ள கொரோனா தொற்று
சுவிஸ் மாகாணமான ஜெனீவா கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு, நாட்டிலேயே ஜெனீவாவில்தான் அதிக அளவில் கொரோனா தொற்று உள்ளது. அங்கு 100,000 பேருக்கு 401 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். சராசரியாக சுவிட்சர்லாந்தில் தொற்றுக்கு ஆளாகியுள்ளோர் வீதம் 265ஆக உள்ளது.
மிகவும் குறைந்த அளவில் தொற்று உடைய மாகாணம் Uri, அங்கு தொற்று வீதம் 166.
நாடு முழுவதும் 3,150 பேருக்கு புதிதாக கொரோனா தோற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பெடரல் சுகாதார அலுவலகம், 62 பேர் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கை மோசமானதாக இருந்தாலும், கடந்த அலைகளைக் காட்டிலும் தற்போது உயிரிழப்புக்கள் குறைவாக உள்ளதாக சுகாதாரத் துறை தலைவர்களில் ஒருவரான Patrick Mathys என்பவர் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையில் பாதிபேருக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டதை நிபுணர்கள் ஒப்புக்கொண்டாலும், கொரோனா பரவலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அது போதுமானதாக இல்லை என்பது தெளிவாகிறது.
புதிதாக தற்போது பரவிக்கொண்டிருக்கும் கொரோனா குறிப்பாக ஆரோக்கியமான இளம் வயதினரைக் குறிவைத்துள்ளது. ஆகவே, இளைஞர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தும் வகையில் பிரச்சாரம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.