சுவிட்சர்லாந்தில் பொதுக்கழிவறையை பயன்படுத்திய இந்திய இளம்பெண் பகிர்ந்துள்ள தகவல்
Influencer reveals the surprising cost of using a public toilet in Switzerland: சுவிட்சர்லாந்தில் பொதுக்கழிவறையை பயன்படுத்திய இளம்பெண்ணொருவர், கழிவறைக்கான கட்டணம் தன்னை வியப்படைய வைத்ததாகத் தெரிவிக்கிறார்.
உலகம் சுற்றுவதற்காக வேலையையும் விட்டு, சொத்துக்களையும் விற்ற இந்திய இளம்பெண், சோனி சலோனி.
கழிவறையை பயன்படுத்துவதற்கான கட்டணம்
சமீபத்தில் சோனி சுவிட்சர்லாந்துக்குச் சென்றுள்ளார். இயற்கை உபாதையைத் தீர்த்துக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதால், கட்டணக் கழிப்பிடம் ஒன்றிற்குச் சென்றுள்ளார் சோனி.

பார்த்தால், அங்கு கழிவறையை ஒரு முறை பயன்படுத்த 1.50 சுவிஸ் ஃப்ராங்குகள் என எழுதப்பட்டிருந்திருக்கிறது.
பொதுவாகவே வெளிநாடு செல்லும் பலரும் அங்கு ஏற்படும் செலவுகளை தங்கள் நாட்டுப் பணமாக மாற்றி யோசிப்பதுண்டு என்பதால், 1.50 சுவிஸ் ஃப்ராங்குகள் என்பது இந்திய மதிப்பில் எவ்வளவு என கணக்குப் பார்த்துள்ளார் சோனி.
ஆக, கழிவறையை பயன்படுத்த ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் வரை செலவிடவேண்டியுள்ளதே என வியக்கிறார் சோனி.
அவர் தனது அனுபவத்தை சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொள்ள, தங்களுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டதாக சிலர் தெரிவித்துள்ளார்கள்.
வேறு சிலர், சுவிட்சர்லாந்தில் இலவச கழிப்பறைகளும் உண்டு என்று கூற, அப்படி இலவச கழிப்பறையை பயன்படுத்திவிட்டு, பிறகு நோய் வந்து எக்கச்சக்கமாக செலவு செய்வதைவிட, நல்ல, சுத்தமான ஒரு கழிவறைக்கு இவ்வளவு பணம் கொடுப்பது எவ்வளவோ மேல் என்கிறார் ஒருவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |