பிரித்தானியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து கசிந்த முக்கிய தகவல்!
பிரித்தானியாவில் வரும் ஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
பிரித்ததானிய அரசு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா இணைந்து நடத்திவரும் ஆய்வு முடிவுக்காக காத்திருக்கிறது.
6 முதல் 17 வயது வரையிலான 300 குழந்தைகளுக்கு ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் முடிவுகள் வரும் ஜூன் அல்லது ஜூலை மதம் வெளியிடப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வரும் செப்டம்பர் முதல் நாட்டில் அனைவருக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதிகபட்ச பாதுகாப்பை உறுதிசெய்ய அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதால் ஆகஸ்ட் முதல் குழந்தைகள் கோவிட் தடுப்பூசிகளைப் பெறலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் மாதம் கிட்டத்தட்ட 11 மில்லியனுக்கும் அதிகமான 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்கள் முதல் டோஸை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவது சர்ச்சையாகவே உள்ளது.
காரணம், 100,000 பெரியவர்களில் குறைந்தது 1,513 பேர் பேர் பாதிக்கப்படும் சமயத்தில், குழந்தைகளைப் பொறுத்தவரை வெறும் 5 முதல் 9 குழ்நதைகள் (0.1 சதவீதம்) மட்டுமே பாதிக்கப்படுவதாக பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து வெளியிட்ட புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
மேலும், தொற்று பரவுவதில் குழந்தைகள் பங்களிக்கவில்லை என்று கல்வியாளர்கள் வாதிடுகினறனர்.