கனடா தாக்குதலில் பாதிக்கப்பட்ட இருவர் குறித்து வெளியாகியுள்ள திடுக் தகவல்...
கனடாவில் 10 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தாக்குதல்தாரிகள் இருவருமே உயிரிழந்துவிட்டார்கள்.
தற்போது அந்த வழக்கில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கனடாவின் Saskatchewan மாகாணத்தில் நடந்த படுகொலைகளைச் செய்த சகோதரர்கள் எதற்காக தாக்குதலில் ஈடு பட்டார்கள் என்பது தெரியவராமலே அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்ட நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால், தற்போது தாக்குதல்தாரிகளில் ஒருவரான மைல்ஸ் சாண்டர்சனால் கொல்லப்பட்ட ஒருவரும், தாக்குதலில் காயமடைந்த ஒருவரும், 2015ஆம் ஆண்டு ஏற்கனவே அவரால் தாக்கப்பட்டுள்ளார்கள்.
கனடாவின் Saskatchewan மாகாணத்தில் டேமியன் (31) மற்றும் மைல்ஸ் சான்சர்சன் (32) என்னும் சகோதரர்கள் இருவர் கத்தியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள்.
இந்நிலையில், தற்போது தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான Earl Burns என்பவரும் காயமடைந்தவர்களில் ஒருவரான Joyce Burns என்பவரும் ஏற்கனவே 2015ஆம் ஆண்டு மைல்ஸ் சாண்டர்சனால் தாக்கப்பட்டுள்ளார்கள். மைல்ஸ் அவர்கள் இருவரையும் சரமாரியாகக் கத்தியால் குத்தியதாகவும், அவர்கள் இருவரும் படுகாயமடைந்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை, மீண்டும் மைல்ஸ் சாண்டர்சனால் தாக்கப்பட்ட Earl Burns உயிரிழந்துவிட்டார். Joyce Burns காயமடைந்துள்ளார். அவர்கள் இருவருமே மைல்ஸின் உறவினர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
அத்துடன், இதே பகுதியைச் சேர்ந்த மக்களை கொல்லப்போவதாக மைல்ஸ் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தியுள்ளார், 2018ஆம் ஆண்டு, இரண்டு பேரைக் கத்தியால் குத்தியுள்ளார்.
மேலும், தனது காதலியான Vanessa Burns என்னும் பெண்ணையும் மைல்ஸ் ஐந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தாக்கியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நன்னடத்தை காரணமாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மைல்ஸ், இனி மது மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்றும், தனது பிள்ளைகள் மற்றும் தன்னால் தாக்கப்பட்டவர்களையோ அவர்களுடைய குடும்பத்தினரையோ சந்திக்கக்கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
THE CANADIAN PRESS.