கரப்பான் பூச்சிகளால் தலை இல்லாமல் பத்து நாட்கள் உயிருடன் வாழமுடியும் என்பது உண்மையா?
கரப்பான் பூச்சிகள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை உலகின் சில இடங்களில் 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதை படிவங்கள் (Fossils ) கண்டுபிடிக்க பட்டுள்ளது.
உலகெங்கிலும் 4000 வகையான கரப்பான் பூச்சிகள் வசிக்கின்றன.
இவைகள் வெளியிடும் ஒரு வகையான புரதம் ஆஸ்த்துமா நோயாளிகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.மேலும் அசுத்தமான இடங்களில் இருந்து வரும் இவை பாக்டீரியாக்களை சுமந்து வருவதால் அவை நம் உணவு பண்டங்களின் படும் போது பல்வேறு நோய்களை உண்டாக்குகின்றன.
தலை இல்லாமல் ஒரு கரப்பான் பூச்சி அதிக பட்சம் ஒரு வாரம் வரை உயிர் வாழும் ஏனென்றால் இதன் நரம்பு மண்டலம் மிக எளிமையானது உடல் பல பாகங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதை கட்டு படுத்தும் நரம்பணுத்திரள்கள் (Neurons )உள்ளன அவை அதன் வழியே சுவாசித்து உயிர் வாழ்ந்தாலும் தண்ணீர் குடிக்க முடியாமல் ஒரு வாரத்தில் நீரிழப்பால் இறந்துவிடும்.
கரப்பான் பூச்சிகள் தேவை பட்டால் சுவாசிக்காமல் 40 நிமிடங்கள் வரை இருக்கமுடியும் மேலும் இவைகளால் தண்ணீருக்கடியில் 30 நிமிடங்கள் வரை உயிர் வாழும் என அறியவில் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவை சில மாதங்கள் முதல் அதிகபட்சம் இரண்டு வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன.
குளிர்ச்சியான இரத்தவகையை சேர்ந்த இவைகளால் உணவில்லாமல் ஒரு மாதம் வரை உயிர் வாழ முடியம் ஆனால் ஒரு வாரம் வரை மட்டுமே தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியும்.
இவைகளால் ஒரு மணி நேரத்திற்கு மூன்று கிலோ மீட்டர் வரை செல்ல முடியும் இதன் மூலம் இவை வீடு முழுவதும் அசுத்தங்களை பரப்புகின்றன.
இவைகள் பல்வேறு பூச்சி தடுப்பு மருந்துகளால் அழிக்க முடியும் ஆனால் இவற்றின் குஞ்சுகள்,முட்டைகள் மருந்து செல்ல முடியாதஇண்டு, இடுக்குகளில் இருப்பதால் மீண்டும்,மீண்டும் வருகின்றன எனவே இவற்றை முழுமையாக அழிப்பது கஷ்டம்தான்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022