தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா! ஐபிஎல் போட்டிகள் நடக்க போகும் மைதானங்கள் தொடர்பில் எடுக்கப்போகும் முடிவு என்ன?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை 4 மைதாங்களில் நடத்த பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021 சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், மும்பையில் உள்ள வான்கடே, பா்போா்ன், டி.ஓய்.பாட்டீல், ரிலையன்ஸ் ஆகிய 4 மைதானங்களில் ஐபிஎல் போட்டியை நடத்துவது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வந்தது.
ஆனால், தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், மும்பையில் ஐபிஎல் போட்டியை நடத்தும் முடிவை பிசிசிஐ கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்குப் பதிலாக ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஆமதாபாத் உள்ளிட்ட மைதானங்களில் போட்டியை நடத்துவது குறித்து பிசிசிஐ பரிசீலனை செய்து வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.