பிரித்தானிய மகாராணியார் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி எது?: இளவரசர் சார்லஸ் மனைவி தெரிவித்த தகவல்
பிரித்தானிய இளவரசரும், வருங்கால மன்னருமான சார்லசும் அவரது மனைவி கமீலாவும் சமீபத்தில் தொலைக்காட்சித் தொடர் தயாரிக்கப்படும் ஸ்டுடியோ ஒன்றிற்குச் சென்றிருந்தார்கள்.
அப்போது, கமீலாவிடம் தான் பங்குகொள்ளும் நடன நிகழ்ச்சியை மகாராணியார் பார்ப்பதுண்டா என்று கேட்டார் Ayling-Ellis என்ற நடிகை.
அதற்கு பதிலளித்த கமீலா, ஆம், மகாராணியார் உங்கள் நடன நிகழ்ச்சியைப் பார்ப்பார் என்று நினைக்கிறேன், குறிப்பாக உங்கள் நடனத்தை பார்ப்பார் என்று எண்ணுகிறேன் என்றார்.
அந்த பதிலைக் கேட்ட Ayling-Ellis மகிழ்ச்சியில் பூரித்துப்போனார். Ayling-Ellis காது கேட்க இயலாத ஒரு நடிகை ஆவார்.
அவர் கமீலாவுக்குப் பூங்கொத்து ஒன்றை வழங்க, கமீலா தானும் தன் பேரப்பிள்ளைகளும் Ayling-Ellisஇன் நடன நிகழ்ச்சியைப் பார்ப்பதாகவும், சொல்லப்போனால் தான் Ayling-Ellisக்கு வாக்களித்ததாகவும் தெரிவிக்க, ராஜ குடும்பத்தினர் தனக்கு வாக்களித்ததை எண்ணி தான் மகிழ்ச்சியில் திளைப்பதாக தெரிவித்துள்ளார் Ayling-Ellis.