தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த சீமான் மற்றும் தினகரன் மனுக்கள் ஏற்கப்பட்டதா? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் மற்றும் சீமானின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பல நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் வேட்பு மனு இன்று ஏற்கப்பட்டது.
அதே போல கோவில்பட்டியில் போட்டியிடும் டிடிவி தினகரன், எடப்பாடியில் போட்டியிடும் எடப்பாடி பழனிச்சாமி, கொளத்தூரில் போட்டியிடும் முக ஸ்டாலின் ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்று கொள்ளப்பட்டன.
நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர் பாலகிருஷ்ணன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது இதையடுத்து அந்த தொகுதியின் அமமுக மாற்று வேட்பாளர் மகேஷ் கண்ணன் வேட்பு மனு ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.