மரவட்டை என்னும் உயிரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ உங்களுக்காக!
மரவட்டைகள் மிகப் பழமையான சில நிலவிலங்குகளில் ஒன்றாகும். இவை கணுக்காலி வகுப்பைச் சேர்ந்த உயிரினமாகும்.
பெரும்பாலான மரவட்டைகள் 20 க்கும் மேற்பட்ட துண்டங்களுடன், மிகவும் நீண்ட, உருளைவடிவான உடலைக் கொண்டவை.
மரவட்டைக்கு ஆங்கிலச்சொல் ’millipede’ என்பதாகும். Millipede எனும் சொல் லத்தீனில் இருந்து வந்த சொல்லாகும், லத்தீனில் இந்தச் சொல்லிற்கு ஆயிரம் கால்கள் எனப் பொருட்படும்
மரவட்டைகளில் சுமார் 12,000 இனங்கள் உள்ளதாகத் தெரிகிறது.
பெரும்பாலான மரவட்டைகள் மெதுவாக நகரும் அழுகலுண்ணிகளாகும். பெரும்பாலான மரவட்டைகள் மக்கும் இலைகளையும், ஏனைய இறந்த தாவரப் பகுதிகளையும் உணவாகக் கொள்பவை. சில பூஞ்சைகளையும் சாப்பிடக்கூடியன. ஆண் மரவட்டைகள் தனது கால்களின் வழியே பெண்ணுக்கு விந்துகளை அனுப்புகிறன.
சில மரவட்டைகள் வீடு அல்லது தோட்டத்தில் காணப்பட்டாலும் இவற்றால் பொதுவாக மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இவை தாவர உண்ணிகளாகும். இவற்றின் வாய் நுண்ணியதாக இருப்பதால் மனிதர்களை இவற்றால் கடிக்க இயலாது.
இவை சிலபோது மிகக் குறைந்த அளவில் தோட்டப் பயிர்களுக்கு பாதிப்பளிப்பவையாக விளங்குகின்றன.