பிரான்ஸ் தொடர்பில் ரஷ்ய உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவல்
பிரான்ஸ் தொடர்பில் ரஷ்ய உளவுத்துறை பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரஷ்ய உளவுத்துறை பரபரப்புத் தகவல்
நேற்று முன் தினம், அதாவது, மார்ச் மாதம் 19ஆம் திகதி, ரஷ்ய உளவுத்துறையான Russian Foreign Intelligence Service (SVR)இன் இயக்குநரான Sergey Naryshkin வெளியிட்ட ஒரு அறிக்கையில், பிரான்ஸ் உக்ரைனுக்கு படைவீரர்களை அனுப்ப தயாராகிவருவது தொடர்பில் தங்களிடம் தரவுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்குக் கிடைத்த தகவலின்படி, பிரான்ஸ் முதல் கட்டமாக 2,000 படைவீரர்களை உக்ரைனுக்கு அனுப்பத் தயாராகிவருவதாக Naryshkin தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி இப்போது வேகமாக சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
⚡️ Naryshkin said that France is preparing 2,000 troops to be sent to Ukraine
— NEXTA (@nexta_tv) March 19, 2024
The director of the Russian Foreign Intelligence Service, Sergey Naryshkin, has said that Russia has information that France is already preparing a military contingent to be sent to Ukraine, initially… pic.twitter.com/1MV1bcaaY7
உக்ரைன் ரஷ்யப் போரில், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், மேற்கத்திய கூட்டாளி நாடுகள் போரில் உக்ரைனுக்கு உதவியாக தங்கள் படைவீரர்களை களமிறக்கவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், அந்த விடயம் புடினுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்திவருகிறது.
இப்படிப்பட்ட நிலையில், பிரான்ஸ் படைவீரர்களை உக்ரைனுக்கு அனுப்பத் தயாராகிவருவதாக Naryshkin தெரிவித்துள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.