வாங்க கொள்ளையடிக்கலாம் என சமூக ஊடகத்தில் பரவிய தகவல்: லண்டனில் கூடிய கூட்டம்
வாங்க, கொள்ளையடிக்கலாம் என டிக் டாக்கில் பரவிய செய்தியைக் கண்டு லண்டனில் ஒரு கூட்டம் மக்கள் திரள, கூடவே பொலிசாரும் குவிக்கப்பட்ட ஒரு சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிக் டாக்கில் பரவிய செய்தி
லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு சாலையிலுள்ள ஒரு கடையில் கொள்ளையடிக்க வருமாறு டிக் டாக்கில் பரவிய செய்தியைத் தொடர்ந்து, அங்கு மக்கள் திரண்டனர்.
Picture date
அந்த செய்தியில், இந்த திகதியில், இத்தனை மணிக்கு, இந்த உடை அணிந்து வரவேண்டும், ஆக்ஸ்போர்டு சாலையிலுள்ள கடை ஒன்றில் நாம் கொள்ளையடிக்கப்போகிறோம், ஓட முடியாதவர்கள் வரவேண்டாம், ஆயுதங்களைக் கொண்டுவரவேண்டாம் என விவரமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று மதியம் ஆக்ஸ்போர்டு சாலையில் ஒரு கூட்டம் மக்கள் கூட, உஷாரான பொலிசாரும் அங்கு குவிந்தனர்.
ஒன்பது பேர் கைது
இந்த குழப்பங்கள் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குறிப்பிட்ட சில பகுதிகளில் கூட்டம் கூடுவதற்கு வெள்ளிக்கிழமை வரை பொலிசார் தடை விதித்துள்ளனர்.
அந்த டிக் டாக் இடுகை ஒரு அர்த்தமற்ற செயல் என்று கூறிய லண்டன் மேயரான சாதிக் கான், அதைப் பார்த்து மக்கள் அங்கு செல்லவேண்டாம் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது..
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |