Infosys நிறுவனத்திற்கு பெரும் அடி., புத்தாண்டுக்கு முன் வந்த மோசமான செய்தி, பங்குகளில் நேரடி தாக்கம்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான Infosys 2024 புத்தாண்டு தொடங்கும் முன்பே பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
அதன் தாக்கம் இந்த வாரம் பங்குச்சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகளில் தெரியும்.
செப்டம்பர் மாதத்தில் ஒரு உலகளாவிய நிறுவனத்துடன் Infosys நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தம் முறிந்தது. இந்த ஒப்பந்தம் 1.5 Billion Dollar (ரூ.12,500 கோடி) பாதிப்புள்ள ஒப்பந்தம் ஆகும்.
தகவல்களின்படி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தீர்வுகளை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய நிறுவனத்துடனான இந்த பாரிய ஒப்பந்தத்தை Infosys ரத்து செய்துள்ளது. இப்போது இரு நிறுவனங்களும் மாஸ்டர் ஒப்பந்தத்தை முன்னோக்கி கொண்டு செல்லாது.
இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், இன்ஃபோசிஸின் தளங்கள் மற்றும் AI தீர்வுகள் மூலம் டிஜிட்டல் மாற்றம் மற்றும் வணிகச் செயல்பாடுகள் சேவைகளை நவீனமயமாக்குவதாகும்.
இந்த உலகளாவிய நிறுவனத்தின் பெயரை Infosys வெளியிடவில்லை. அதே நேரத்தில், ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கான காரணம் குறித்து நிறுவனம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
என்ன ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தம் நிறுவனம் அதன் தற்போதைய வாடிக்கையாளர்களில் ஒருவருடன் 5 ஆண்டுகளாக செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், நிறுவனம் AI, Automation அடிப்படையிலான நவீனமயமாக்கல் மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்க திட்டமிட்டது. இந்த ஒப்பந்தத்தின் தாக்கம் நிறுவனத்தின் பங்குகளில் தெரிந்தது. நிறுவனத்தின் பங்குகள் அதிகமாக வாங்கப்பட்டது. இதனால் பங்குகளில் இரண்டு சதவீதத்துக்கும் மேல் உயர்வு ஏற்பட்டது.
சச்சின் டெண்டுல்கர் நம்பி ரூ. 5 கோடி முதலீடு செய்த நிறுவனம்., பிவி சிந்து, சாய்னா நேவால் உட்பட பலர் லாபம்
நிறுவன அதிகாரி ராஜினாமா செய்தார்
சமீபத்தில், இன்ஃபோசிஸ் தலைமை நிதி அதிகாரி (CFO) நிலஞ்சன் ராய் (Nilanjan Roy) தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சுமார் 6 ஆண்டுகள் பதவியில் இருந்த நிலஞ்சன் ராய் திடீரென ராஜினாமா செய்தார். அதையடுத்து இரண்டு வாரங்களுக்குள், ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்ணனிடம் ரூ.5000 கடன் வாங்கித் தொழில் தொடங்கியவர்., இன்று ரூ.14,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு அதிபதி
இருப்பினும், கடந்த சில மாதங்களில், இன்ஃபோசிஸ் பல பாரிய ஒப்பந்தங்களை அறிவித்துள்ளது. கடந்த வாரம், இன்ஃபோசிஸ் வாகன உதிரிபாக விநியோகஸ்தர் LKQ Europe-உடன் 5 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
சமீபத்தில், லண்டனை தளமாகக் கொண்ட Liberty Global நிறுவனத்துடன் ஐந்து ஆண்டுகளுக்கு 1.64 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இன்ஃபோசிஸ் கையெழுத்திட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Infosys loses mega contract, Infosys loses global client, Infosys loses Rs12,500 crore deal, Artificial Intelligence, Infosys, N. R. Narayana Murthy, Infosys Narayana Murthy, Indian businessman