450 கோடி டொலர் சொத்து மதிப்பு: இன்போசிஸ் வளர்ச்சிக்காக ஸ்டோர் ரூமில் படுத்த நாராயணமூர்த்தி
இன்போசிஸ் நிறுவனத்தின் ஆரம்ப கட்டத்தில் அதன் நிறுவனர் நாராயணமூர்த்தியை வாடிக்கையாளர் ஒருவர் தன் வீட்டின் ஸ்டோர் ரூம்-மில் உறங்க சொன்ன சம்பவத்தை சுயசரிதை நூலில் அவரது மனைவி சுதா மூர்த்தி பகிர்ந்துள்ளார்.
அமெரிக்கா சென்ற நாராயண மூர்த்தி
இன்போசிஸ் நிறுவனம் தற்போது உலக அரங்கிலும் சரி, இந்தியாவிலும் சரி முதன்மையான தொழில்நுட்ப நிறுவனமாக உயர்ந்துள்ளது.
ஆனால் ஆரம்ப கட்டத்தில் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அமெரிக்க சென்ற இன்போசிஸின் நிறுவனர் நாராயணமூர்த்தியை அமெரிக்க வாடிக்கையாளர்கள் ஒருவர் தன்னுடைய வீட்டின் ஸ்டோர் ரூமில் படுக்க வைத்ததாக அவரது மனைவி சுதா நாராயணமூர்த்தி தன்னுடைய சுயசரிதை நூலில் தெரிவித்துள்ளார்.
சுதா மற்றும் நாராயணமூர்த்தின் ஆரம்பகால வாழ்க்கை என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தில், இன்போசிஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆரம்ப கட்டத்தில் நாராயணமூர்த்தி எதிர்கொண்ட இன்னல்கள் குறித்து விவரித்துள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் தொடக்க காலகட்டத்தில் தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள வாடிக்கையாளர் ஒருவரின் நிறுவனம் ஒன்றுக்கு நாராயணமூர்த்தி சென்றார்.
அப்போது டான் லைலெஸ் என்பவர் டேட்டா பேசிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.
அவர் எப்போதும் குடைச்சல் பேர்வழியாக இருப்பவர், இறுதி நேரத்தில் திருத்தங்களை கூறுவார், கட்டணங்களை சரியான நேரத்திற்கு தரமாட்டார், இதனை ஒரு முறை நேரடியாக நாராயணமூர்த்தி வாதிட்டத்தால் அவர் மீது கோபப்பட்டார்.
பிறகு அவரது வீட்டில் நாராயணமூர்த்தி இருக்க வேண்டிய சூழலில், அவர் தங்குவதற்கு தனியறை கூட ஒதுக்காமல் ஸ்டோர் ரூமில் இருந்த இரண்டு அட்டை பெட்டிகளுக்கு நடுவே உறங்கி கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனை நாராயணமூர்த்தி என்னிடம் தெரிவித்த போது கடுமையான கோபம் வந்தது, ஆனால் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நாராயணமூர்த்தி அத்தனையையும் பொறுத்துக் கொண்டார் என நாராயணமூர்த்தின் மனைவி சுதா மூர்த்தி சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபலமான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 450 கோடி அமெரிக்க டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
N.R. Narayana Murthy, Indian tech giant, Infosys, India's Richest,Billionaires,Software services,Rishi Sunak,IT, Information Technology, US client,store room,American businessman,businessman,Money,biography,Sudha Murthy,Data Basics Corporation, google, Google news, google business news, trending news