பிரித்தானியாவில் கொரோனாவுக்கு மூச்சு வழி மருந்து! வெளியான முக்கிய தகவல்
பிரித்தானியாவில் மூச்சு வழியாக மருந்தை செலுத்தி கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் சோதனை மருத்துவமனைகளில் துவங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால், பிரித்தானியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வருகிறது.
இதனால் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பொதுமுடக்கம், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூச்சு வழியாக மருந்தைச் செலுத்தி, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய முறை மருத்துவமனைகளில் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. இன்டா்பெரான் பீட்டா-1ஏ என்ற புரதத்தை மூச்சு வழியாக கொரோனா நோயாளிகளுக்குச் செலுத்தும் சிகிச்சை முறை மருத்துவமனைகள் சோதனை முறையில் தொடங்கியுள்ளன.
மனிதா்களைத் தீநுண்மி தாக்கினால் உடல் உற்பத்தி செய்யக் கூடிய அந்தப் புரதத்தை மூச்சு வழியாக செலுத்துவதன் மூலம், கொரோனா நோயாளிகள் உடல் நிலை மோசமடைவதைத் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்த சோதனை தொடங்கப்பட்டுள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனர்.