இளவரசிக்கு ஏற்பட்ட காயம் சிறிய விடயம் அல்ல... ராஜ குடும்ப நிபுணர் கூறும் சிந்திக்கவைக்கும் விடயம்
மன்னரின் தங்கையான இளவரசி ஆனுக்கு காயம் ஏற்பட்டது சிறிய விடயம் அல்ல என்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர். அவர் கூறும் விளக்கம் உணமையாகவே சிந்திக்கவைப்பதாக அமைந்துள்ளது.
இளவரசி ஆன் மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமை மாலை, Gloucestershireஇலுள்ள Gatcombe Park எஸ்டேட்டுக்கு அவசர உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்த இளவரசி ஆனுக்கு அவர்கள் முதலுதவி அளித்தபின், அவரை Southmead மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள் அவர்கள்.
அவருக்கு என பிரச்சினை என பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தெரிவிக்காத நிலையில், சம்பவ இடத்தில் குதிரைகள் நின்றதால், அவரை குதிரை மிதித்திருக்கலாம் அல்லது குதிரை தலையால் முட்டியதால் இளவரசி காயமடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இளவரசிக்கு காயம் ஏற்பட்ட விடயம் சிறியது அல்ல
இளவரசிக்கு சிறிய காயமே ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், 73 வயதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்பது மோசமான செய்தி என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான மைக்கேல் (Michael Cole) என்பவர்.
இளவரசி ஆன் இரவு முழுவதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதே, அது சிறிய விடயம் அல்ல என்பதை காட்டுகிறது என்கிறார் மைக்கேல்.

தலையில் அடிபடும்போது, concussion என்னும் பிரச்சினை ஏற்படுகிறது. அது சிறிது நேரம் தலையைச் சுற்றி ஏதோ பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் சின்ன விடயமாகவும் இருக்கலாம்,அல்லது ஆபத்தான விடயமாகவும் இருக்கலாம் என்கிறார் மைக்கேல்.
எந்த பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதாலேயே அவர் மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டுள்ளார் என்று கூறும் மைக்கேல், அவர் இன்னமும் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை, இன்னும் கூடுதல் நேரம் கூட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |