பிரான்சில் மருத்துவமனை ஒன்றில் கொரோனா தடுப்பூசி விஷயத்தில் நடக்கும் அநியாயம்! பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
பிரான்சில் மருத்துவமனை ஒன்றில் கொரோனா தடுப்பூசி வழங்குவதில், பிரபலங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, பிரான்சில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படுபவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தலைநகரான பாரிசில் இருக்கும் American Hospital of Paris மருத்துவமனை கொரோனா தடுப்பூசிக்காக, முன் பதிவு செய்தவர்களை காத்திருக்கச் செய்துவிட்டு, பிரபலங்களுக்கு முன்னுரிமை வழங்கி தடுப்பூசி போடுவதாக கூறப்படுகிறது.
தடுப்பூசி விடயத்தில் முன்னுரிமை யாருக்கு எனபதில் நாம் தெளிவாக இருப்பதாகவும், மிகவும் பாதிக்கப்பட்டோருக்கே முதலில் தடுப்பூசிகள் வழங்கப்படும் என அண்மையில் சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், American Hospital of Paris மருத்துவமனையில் கிட்டத்தட்ட 20 பிரபலங்களுக்கு தடுப்பூசிகள் முன்னுரிமையுடன் போடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.