பிரித்தானியாவில் சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதி: தீவிர தேடுதல் வேட்டையில் பொலிஸார் I
nmate Ashley Young Escaped From Suffolk Prison in UK: பிரித்தானியாவில் சிறையில் இருந்து தப்பிய கைதியை பிடிக்க பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறையில் இருந்து தப்பிய கைதி
பிரித்தானியாவின் சஃபோக்(Suffolk) பகுதியில் அமைந்துள்ள எச்.எம்.பி ஹோல்ஸ்லி பே(HMP Hollesley Bay) சிறையில் இருந்து ஆஷ்லி யாங்(Ashley Young) என்ற 32 வயது கைது தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை(அக்டோபர் 13ம் திகதி) மேற்கொள்ளப்பட்ட வழக்கமான வருகை பதிவின் போது கைதியான ஆஷ்லி யாங் சிறையில் இருந்து தப்பியோடியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரை பிடிக்க உள்ளூர் காவல்துறையின் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
அத்துடன் சிறைக்கதியான ஆஷ்லி யாங்கிற்கு பொதுமக்கள் யாரும் உதவ வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
தப்பிய சிறைக்கைதியின் அடையாளங்கள்
இந்நிலையில் தப்பியோடிய ஆஷ்லி யாங்கின் புகைப்படத்தை வெளியிட்டு அவரது அடையாளங்களையும் அறிவித்துள்ளனர்.
அதன்படி, வெள்ளை இனத்தை சேர்ந்தவரான அவர், 5 அடி 10 அங்குலம் உயரம் கொண்டவர் என்றும், நீல நிற கண்கள், தாடி, மீசை மற்றும் நடுத்தர உடல்வாகு கொண்டவர் என்றும் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பொதுமக்கள் யாரேனும் ஆஷ்லி யாங்கை பார்த்தால் உடனடியாக 999 என்ற அவசர எண்ணிற்கு அழைத்து (CAD 294: October 13) என்ற குறிப்பை தெரிவித்து தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.