பெற்றோர்களால் கைவிடப்பட்டு மோசமான இளமை பருவத்தை சந்தித்த நபர்! சிறையில் உயிரிழந்தார்
கனடா சிறையில் உயிரிழந்த கைதி.
40 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர் என தகவல்.
கனடா சிறையில் 40 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வந்த கைதி உயிரிழந்துள்ளார்.
பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்தவர் டார்சி சிடோருக் (58). இவர் 18 வயதாக இருக்கும் போது இரண்டு பேரை கொலை செய்தது மற்றும் ஆசிரியை, குழந்தையை தாக்கியது உள்ளிட்ட வழக்குகளை எதிர்கொண்டார்.
இதனையடுத்து விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார். 40 ஆண்டுகளாக Abbotsford நகரில் உள்ள சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார் டார்சி.
டார்சி தனது மூன்று வயதில் ஒரு விபத்தில் சிக்கி கடுமையான தீக்காயங்களுக்கு ஆளானார், இதையடுத்து தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை மருத்துவமனையில் தனியாகக் கழித்ததாகவும், பெற்றோரால் கைவிடப்பட்டு உறவினரின் பராமரிப்பில் வைக்கப்பட்டதாகவும், அங்கு அவர் அதிக துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாகவும் ஒரு மனநல மருத்துவர் கூறியிருக்கிறார்.
Christian Amundson/CBC
இந்த நிலையில் அவர் சிறையில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இறப்பிற்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் அது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.