கனடா சிறையில் இருந்த கைதி ஒருவர் மரணம்
கனடாவில் சிறையில் இருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டிரம்ஹெல்லர் நகரில் உள்ள சிறையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
போதை மருந்துகளை கடத்திய சம்பவத்தில் ஈடுபட்ட ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டு குறித்த சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் சிறையில் உயிரிழந்துள்ளார். அவர் இறப்பிற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.
இது தொடர்பாக Correctional Service கனடா விசாரணை நடத்தி வருகிறது.
டிரம்ஹெல்லர் சிறையில் 582 கைதிகளை அடைக்கும் வசதியுள்ளது.
இங்கு கடந்தாண்டு டிசம்பர் 7ஆம் திகதி மார்க் கெல்லி என்ற கைதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.