ஐசிசியின் சிறந்த டி20 அணி! இலங்கை வீராங்கனை பெற்றுக்கொண்ட கௌரவம்
இலங்கை வீராங்கனை இனோக ரணவீரா ஐசிசியின் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் டி20 அணிக்கான தொப்பியை பெற்றார்.
இலங்கை மகளிர் அணி
இலங்கையின் மகளிர் கிரிக்கெட் அணி தற்போது உலகக்கோப்பை டி20 தொடரில் விளையாடி வருகிறது.
ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி 4 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை அணி 102 ஓட்டங்கள் படுதோல்வியடைந்தது.
சமீபத்தில் ஐசிசி தங்களது 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் டி20 அணியை அறிவித்தது. அந்த அணியின் கேப்டனாக சோபி டிவைன் தெரிவு செய்யப்பட்டார். இந்த அணியில் இலங்கையின் தரப்பில் இனோக ரணவீரா இடம்பெற்றிருந்தார்.
@OfficialSLC
இனோக ரணவீரா
இந்த நிலையில் தனக்கான ஐசிசியின் சிறப்பு தொப்பியை இலங்கை அணியின் மூத்த வீராங்கனையான இனோக ரணவீரா பெற்றுக் கொண்டார்.
இனோக ரணவீரா 66 டி20 போட்டிகளில் 73 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 4/7 என்பது குறிப்பிடத்தக்கது.
@OfficialSLC