நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை கலங்கடித்த இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரம்!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை வீராங்கனை இனொக ரணவீரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பல்லேகேலேவில் நேற்று நடந்தது.
இந்த போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிலக்ஷி டி சில்வா 43 ஓட்டங்களும், ஹாசினி பெரேரா 37 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங், தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டுகளையும், பூஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் ஆடிய இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை ஷபாலி வெர்மா 35 ஓட்டங்கள் எடுத்து இனொக ரணவீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் 44 ஓட்டங்கள் எடுத்திருந்த இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத்தையும், 34 ஓட்டங்கள் எடுத்திருந்த ஹர்லீன் தியோலையும் இனொக ரணவீரா வெளியேற்றினார். எனினும், தீப்தி சர்மா 22 ஓட்டங்களும், பூஜா 21 ஓட்டங்களும் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.
இந்த போட்டியில் இலங்கை அணியின் இனொக ரணவீரா அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 10 ஓவர்கள் வீசிய அவர் 39 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.
A terrific spell by Inoka Ranaweera! ?#SLvIND #SLWomen pic.twitter.com/BNJRSxEQpL
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 1, 2022