இந்திய கடற்படையில் இணையும் புதிய INS Androth போர் கப்பல்
இந்திய கடற்படையில் புதிய INS Androth போர் கப்பல் இணையும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையின் கடல்சர் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் வகையில், INS Androth என்ற புதிய உள்நாட்டு போர் கப்பல், அக்டோபர் 6-ஆம் திகதி விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் அதிகாரபூர்வமாக சேர்க்கப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டுப்பாட்டின் தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் பங்கேற்கிறார்.
INS Androth கப்பல், Anti-Submarine Warfare Shallow Water Craft (ASW-SWC) தொடரில் இரண்டாவது கப்பலாகும். இதற்கு முன் INS Arnala ஏற்கெனவே கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் கொல்கத்தாவில் உள்ள Garden Reach Shipbuilders and Engineers (GRSE) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
80-க்கும்மேற்பட்ட உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளதால், இது 'ஆத்மநிர்பர் பார்த்' திட்டத்தின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.
Androth என்ற பெயர் லட்சத்தீவின் அந்தரோத் தீவின் பெயரிலிருந்து வந்தது. இதற்கு முன் INS Androth (P69) என்ற கப்பல் 27 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளது.
புதிய INS Androth கப்பல், எதிரி நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து அழிக்கக்கூடிய நவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் கொண்டது.
இது கடல்சார் கண்காணிப்பு, கரையோர பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளிலும் ஈடுபடும். இந்தியாவின் நீண்ட கடற்கரை மற்றும் தீவுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இது முக்கிய பங்கு வகிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
INS Androth joins Indian Navy, Indian Navy, INS Androth warship